Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க புதிய ஆணையம்

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க புதிய ஆணையம்

இந்த ஆணையம், வெளிநாடுவாழ் தமிழ் வம்சாவளி தொழிலதிபர்களின் முதலீடுகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தும்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், தலைமைச் செயலர் தலைமையில் தமிழ்நாடு முதலீடு ஊக்குவிப்பு ஆணையம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் தமிழ்நாடு முதலீடு ஊக்குவிப்பு ஆணையத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு வணிக எளிதாக்கல் சட்ட திருத்த மசோதாவை தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தை வரும் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடையும் வகையில், தலைமைச் செயலர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், ஆணையர்கள் மற்றும் மேலாண் இயக்குநர்கள் 19 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த ஆணையம், வெளிநாடுகளில் வாழும் தமிழ் வம்சாவளி தொழிலதிபர்களின் முதலீடுகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தும்.

மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு, குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர ஆணையம் நடவடிக்கை எடுக்கும். 

முதலீடு​களுக்கு தடை​யாக உள்ள அமைப்பு ரீதியி​லான சிக்​கல்​களைக் கண்​டறிந்து, மாநிலத்​தின் முதலீட்டு சூழலை​யும், எளி​தாக தொழில் தொடங்கி நடத்​து​வதை​யும் மேம்​படுத்த கொள்கை உரு​வாக்​குதல் உள்ளிட்ட பணி​களை​யும் மேற்​கொள்​ளும்​. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
காதலியின் விவரங்களை கேட்டவருக்கு தகவல் ஆணையம் கண்டனம்
அடுத்த செய்தி
தவெக எம்எல்ஏவிடம் ரூ.30 கோடி பேரம் - அதிமுக பிரமுகர் கைது

தொடர்புடைய செய்திகள்